பாரதத்தில், ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் உடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி), உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் மிக்கதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கொரோனாவின் அனைத்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் இம்மருந்து சிறப்பாக செயல்படுகிறது என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் மறுஆய்வு செய்யப்படவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.