அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட், உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், பிரதமர் மோடி 66 சதவீத ஆதரவுடன் உலகத் தலைவர்களில் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53 சதவீதத்துடன் 6ம் இடத்தில் உள்ளார். கொரோனா தொற்றுக் காலத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக எதிர்கட்சிகள் அனைத்தும் அவதூறு பிரச்சாரம் செய்த நிலையிலும் கருத்துக் கணிப்புகளில் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.