மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, பாரத வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெல்லா, கடந்த 2014ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். லிங்க்ட் இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்துவது, கிளவுட் தொழில்நுட்பம், தேவையற்ற 18 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம், எளிமையான கட்டமைப்பு என பல நிர்வாக சீர்திருத்தம், புதுமைகளை மேற்கொண்டார். இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 2 லட்சம் அமெரிக்க டாலரை எட்டுகிறது. தற்போது, மைக்ரோசாப்ட்டின் இயக்குநர்கள் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, இயக்குநர்கள் குழு தலைவராக, பில்கேட்ஸ், ஜான் தாம்சன் ஆகியோர் பதவி வகித்து உள்ளனர். தற்போது ஜான் தாம்சனுக்கு பதிலாகவே சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.