சிறைப்பட்ட கொடி காத்த விஷால்

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில், கடந்த பிப்ரவரி மாதத்தில் பாரதத்தின் விவசாய சட்டங்களுக்கு எதிராக அங்குள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், இந்திய தேசியக்கொடியை சேதப்படுத்த முயன்றனர். இதனை பார்த்த விஷால், அந்த கூட்டத்தின் உள்ளே நுழைந்து தேசத்தின் கொடியைக் காக்க முயன்றார். அப்போது கூட்டத்தை கலைக்க முயன்ற ஆஸ்திரேலிய காவலர்கள் இவரையும் காலிஸ்தானியர் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற ஹரியானாவை சேர்ந்த மாணவர் விஷால். அங்கு அவர், கடந்த ஜனவரி 26 அன்று இரவில், விவசாய சட்டத்தை ஆதரித்தும், பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும் “மூவர்ணக் கொடியுடன் கார் பேரணியை” ஏற்பாடு செய்தார். அதில், பிரிவினைவாதிகளின் காலிஸ்தானியக் கொடியை எரித்தார். இதனால், அவர் காலிஸ்தானியர்களின் இலக்காக ஆனார். காலிஸ்தானிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்து காரை சேதப்படுத்தினர். பலமுறை அவரையும் தாக்க முயன்றனர். அவரது நண்பர்களான வேறு சில இந்திய மாணவர்களை தாக்கினர். தற்போது, தவறுதலாக காலிஸ்தானியர் என சிறையில் அடைக்கப்பட்ட விஷாலுக்கு உதவ சில இந்திய அமைப்புகள் முன்வந்துள்ளன. ஒரு வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். காலிஸ்தான் சார்பு குழுக்கள் ஆஸ்திரேலியாவில் மோடி சார்பு குழுக்களை குறிவைத்து வருகின்றன, சிறையிலும் விஷால் காலிஸ்தானிகளால் தாக்கப்பட்டுள்ளார், எங்களது மகனை காக்க இந்திய தூதரகம் விரைந்து முயற்சிக்க வேண்டும் என்று அவரது தந்தை நாதுராம் கோரிக்கை வைத்துள்ளார்.