டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை செப்பனிடவும் மேம்படுத்தவும் மக்களின் வரிப் பணத்தில் சுமார் 9 கோடி ரூபாயை செலவிடுவதாக பா.ஜ.க தலைவர் நவீன் குமார் ஜிண்டால் குற்றம் சாட்டியுள்ளார். அதில் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படும்போது முதல்வர் வீட்டில் நீச்சல் குளம் கட்டுகிறார். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பதிலாக தனது வீட்டை மேம்படுத்துகிறார் என கூறி அதற்கான டெண்டர் நகலை வெளியிட்டுள்ளார். மேலும், கெஜ்ரிவால் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் விளம்பரங்கள் செய்வதற்கு மட்டுமே ரூ. 800 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.