உ.பி, காஜியாபாத்தில் அப்துல் சமத் சைஃபி என்பவரை ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என சொல்ல சொல்லி சிலர் தாக்கியதாக ஒரு போலி வீடியோ வெளியானது. அவரை தாக்கியவர்களில் முஸ்லிம்களும் அடக்கம். இதற்கு தனிப்பட்ட விரோதம் காரணம் என தெரியவந்தது. இச்செய்தியை வெளியிட்ட டுவிட்டர், ஆல்ட் நியூஸ், தி வயர் ஆகிய நிறுவனங்கள் மீது உ.பி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இதை வைத்து வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட முயன்றதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி மற்றும் ஸ்வாரா பாஸ்கர் மீது, உ.பி, பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த கிஷோர் குர்ஜார், லோனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதில் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்த முயன்ற உள்ளூர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் உமேத் பஹல்வான் இத்ரிஸ் மீது காஜியாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.