உத்திர பிரதேசத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்டதாக போலி செய்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது. இந்த போலி செய்தியை முதலில் பரப்பிய தி வயர், ஆல்ட் நியூஸ் முஹம்மது சுபைர், பத்திரிகையாளர்கள் சிலர், இந்த காணொளியை நீக்காமல் போலி செய்தி பரவ காரணமாக இருந்த டுவிட்டர் உள்ளிட்ட 8 பேர் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த பொய் செய்தியை தமிழகத்தில் ஒளிபரப்பிய சன் நியூஸ் மற்றும் பி.பி.சி தமிழ், வினவு உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், வலைத்தளங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினரும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், சன் டிவி உட்பட பல செய்தி ஊடகங்கள் இதற்கு மழுப்பலாக மன்னிப்பு கேட்டுள்ளன.