ஹால் மார்க் கட்டாயம்

தங்க நகைக்கு ‘ஹால் மார்க்’ முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தங்க நகை விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ‘ஹால் மார்க்’ முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இனி ‘ஹால்மார்க்’ முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்க வேண்டும், என முடிவு செய்யப்பட்டது.