இம்ரான் கான் மழுப்பல்

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கனடாவின் சி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மீதான இனப்படுகொலை குறித்து கவலை இல்லையா என கேள்வி கேட்கப்பட்டபோது, ‘சீனா எங்கள் அண்டை நாடு. கடினமான காலங்களில் சீனா எங்களுக்கு துணையாக இருந்தது. எங்களுக்கு கவலையாக இருந்தால், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி நாங்கள் பேசுவோம்’ என இம்ரான் கான் தெரிவித்தார். ஆனால், கனடாவில் அண்மையில் ஒரு முஸ்லீம் குடும்பம் கொலை செய்யப்பட்டது குறித்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். மனிதர்களிடையே வெறுப்பை உருவாக்கும் வலைத்தளங்களுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை’ என கருத்துத் தெரிவித்தார். இந்த ஆண்டு மே மாதம், சி.என்.என் தொலைக்காட்சி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷியை பேட்டி கண்டது. ​​அப்போதும் உய்குர் முஸ்லிம் பிரச்சினையை கேட்கப்பட்டபோது, அவரும், சீனா நல்ல நண்பன் என கூறினாரே ஒழிய உய்குர் முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சமீபத்தில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற 2,000 உய்குர் முஸ்லிம் குடும்பங்களை திருப்பி அனுப்ப சீனா பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. இது, பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் குறித்த கவலையைவிட, பணம் குறித்த கவலை மட்டுமே அதிகம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.