பூஜனீய டாக்டர் ஜி, குருஜி மற்றும் தேவரஸ்ஜி ஆகிய முதல் மூன்று சர் சங்கசாலகர்களின் வழி நடந்து சங்கத்தின் நான்காவது சர் சங்கசாலக் பொறுப்பினை ஏற்று அனைவராலும் அன்புடன் ‘ரஜ்ஜு பையா’ என்று அழைக்கப்பட்டவர் பேராசிரியர் ராஜேந்திர சிங்.
கார்யகர்த்தர் குறித்து பரம பூஜனீய ஸ்ரீ குருஜி மேற்கோள் காட்டிய உதாரணத்தின்படி, ரஜ்ஜு பையா, அனைவரும் அணுகும், ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜொலிக்கும் வைரமாகத் திகழ்ந்தார்.
தன்னுடைய பேராசிரியர் பணியில் எப்படி சிறப்பாக மாணவர்களை வழி நடத்தினாரோ அதேபோல, சங்கப் பணியிலும் கார்யகர்த்தர்களை நேர்த்தியுடன் வழிநடத்தி, பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் சங்கத்தின் தெளிவான கண்ணோட்டத்தை விளக்கி தேசநலனை முன் நிறுத்தி நல் வழிகாட்டினார்.
பேராசிரியர் ராஜேந்திர சிங்கின் சங்க வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு அனுபவங்களையும், பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், அவரோடு பழகிய கார்யகர்த்தர்களின் அனுபவங்களையும் ஒருங்கே தொகுத்து அழகிய பூச்சரமாக நூல் வடிவில் ‘பேராசிரியர் ராஜேந்திர சிங்கின் வாழ்க்கைப் பயணம்’ எனும் தலைப்பில் ஹிந்தியில் அளித்துள்ளார் ரதன் ஷார்தா.
இதன் தமிழாக்கத்தை அழகு தமிழில் எளிய நடையில், தனக்கே உரித்தான பாங்கில், சொல் நயத்துடனும் மொழியாக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ் தென் பாரதத் தலைவர் முனைவர் இரா. வன்னியராஜன்.
பூஜனீய ரஜ்ஜு பையாவின் வாழ்க்கைப் பயணம் குறித்த இந்நூல் சங்க ஸ்வயம்சேவகர்கள், கார்யகர்த்தர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், சங்கப்பணியினை மேலும் உற்சாகத்துடன் செய்ய ஊக்கம் அளிப்பதாகவும் நிச்சயம் அமையும் என்று நம்புகிறோம்.
மூல நூலாசிரியர்: ரதன் ஷார்தா (ஹிந்தி), தமிழாக்கம்: முனைவர் இரா. வன்னியராஜன். நூல் வெளியீட்டு நாள்: ஹிந்து சாம்ராஜ்ய தினம் (ஜூன் 23, 2021). நூல் வெளியீடு – விஜயபாரதம் பிரசுரம். நூல் விலை: ரூ. 300 (கொரியர் சார்ஜ் உட்பட) தொகையை செலுத்தி உங்களுக்கான பிரதியை முன் பதிவு செய்யும்போது அதனுடன் தங்கள் முகவரியையும் அவசியம் தெரிவிக்கவும். தொடர்புக்கு: 8939149466. Bank Details: Vijayabharatham Prasuram, Canara Bank, Egmore Branch, Current Acc. No: 0932201002808, IFSC Code: CNRB0000932.