உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் முறையீடு

மேற்கு வங்கத்தில் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், வன்முறை தாக்குதல், கற்பழிப்பு, வழக்கில் காவல்துறையின் அக்கறையின்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். மேலும், இதனை ஒரு சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டுள்ளனர். இதில் பல்வேறு பெண்களும் தாங்கள் எப்படி யாரால் பலாத்காரம் செய்யப்பட்டோம், தங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்படி கொல்லப்பட்டனர், பொருட்கள் கொள்ளை, புகார் அளித்தால் கொல்லப்படுவோம் என மிரட்டல், புகார் பதிவில் காவல்துறையினரின் அலட்சியம், காவல்துரையினரே மிரட்டியது, குண்டர்களை வழி நடத்திய திருணமூல் கட்சித் தலைவர்கள் யார் யார் என அனைத்துத் தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.