மும்பையின் புறநகர் பகுதியான மலாட்டில் உள்ள மல்வானி பகுதியில் சமீபத்தில், குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இது, அப்பகுதியில் ‘22 ஹெக்டேர் சதுப்பு நிலக் காடுகள் ஆக்கிரமிப்பு, அங்கு வாழ்ந்த ஹிந்துக் குடும்பங்கள் துரத்தப்பட்டு பங்களாதேஷ், ரோஹிங்கியாக்களின் சட்டவிரோதமாக குடியமர்வு, இந்திய கடற்படை தளமான ஹம்லாவின் அருகில் அதன் பாதுகாப்புக்கு ஆபத்தான வகையில், 14.2 ஏக்கர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு, ஹிந்து வாக்காளர்களின் எண்ணிக்கை 15,000 குறைவு, முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 12,000 உயர்வு, ஆக்கிரமிப்பு நிலங்களில் நடைபெறும் கெட்டோ, சூதாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆபாசப் படங்கள் போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், சமூக விரோதிகளுக்கு உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவு, முஸ்லிம் கும்பல்களால் அங்குள்ள ஹிந்துக்கள் வெளியேற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ என அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அம்பலப்படுத்தியுள்ளது.