பா.ம.க குறித்து புகழேந்தி விமர்சனம்

சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.கவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பி.எஸ்சை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என பா.ம.கவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது குறித்து பேசிய அவர், ‘ஓ.பி.எஸ், கையெழுத்து போட்டதால்தான் இன்று அ.தி.மு.க மூலமாக அன்புமணி எம்.பியாக உள்ளார். அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் பா.ம.க தோற்றுவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது. பா.ம.க வலுவாக உள்ள பகுதிகளில், அ.தி.மு.க தோற்றுள்ளது. எங்கள் தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும், தேர்தல் முடிவுக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பா.ம.கவின் வாடிக்கையாக உள்ளது’ என கூறினார்.