ஈமச்சடங்குகள் செய்த ஸ்வயம்சேவகர்கள்

கொரோனா இரண்டாம் அலையின்போது, கொரோனா காரணமாக இறந்தவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டது, அஸ்திகள் சேகரிக்க முடியாத சூழல், சடங்குகள் செய்ய சாஸ்திரிகள் கிடைப்பதில் சிரமம், காரிய மண்டபங்கள் மூடல் என பல காரணங்களால், இறந்த பல்லாயிரம் ஹிந்துக்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. மத்திய பிரதேசம் விடிஷா பகுதியில் உள்ள காரயான் கிராமத்தில், குல்தீப் சர்மா என்ற ஒரு ஸ்வயம்சேவகர், தன் நண்பரின் பாட்டியின் இறுதி சடங்குக்கு உதவி செய்ய அங்குள்ள போர்கட் மயானத்திற்கு சென்றிருந்தார். அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் ஈமசடங்குகளைச் செய்ய மக்கள் இல்லை என்பதை உணர்ந்தார். அது, அவரது பார்வையை மாற்றியது. உடனடியாக, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ முடிவெடுத்து அதற்கு தன் சக ஸ்வயம்சேவக சகோதரர்களின் ஒத்துழைப்பை நாடினார். சஞ்சய் பிரஜாபதி, துருவ் மற்றும் சுரேந்திரா ஆகியோர் உடனடியாக ஒப்புக்கொண்டனர். அந்த நான்கு ஸ்வயம்சேவகர்களும் அங்கு 38 நாட்கள் தங்கியிருந்து, விடிஷாவில் கொரோனாவால் இறந்த 205 பேருக்கு ஈமச்சடங்குகளை நிகழ்த்தினர்.  அதில், பதினான்கு பேரின் அஸ்தி கலசத்திற்கு உரிமை கோர யாரும் முன்வரவில்லை. எனவே, இந்த நால்வரும் இறந்த அந்த ஆன்மாக்களின் அஸ்தியை உத்தர பிரதேசத்தின் பிரயாகராஜுக்கு கொண்டு சென்று விசர்ஜனம் செய்தனர்.