முஸ்லிம் சேனாவாக உருமாறும் சிவசேனா

சிவசேனா தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் ஷெவாலே, மும்பை மேயர் கிஷோரி பெட்னேகருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், முஸ்லிம் கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்து வீரமாக பல போர்கள் புரிந்த மாவீரன் பிருதிவிராஜ் சௌஹானை, கைது செய்ததாககக் கூறிக்கொள்ளும் குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் பெயரை, கட்கோபர்-மன்கூர்ட் இணைப்பு சாலையில் ஒரு பாலத்திற்கு சூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிவசேனா எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் அடிப்படை கொள்கைகளை மறந்து, அப்பகுதியில் உள்ள 70 சதவீத முஸ்லிம் வாக்காளர்களை கவர்வதற்காக இப்படி கடிதம் எழுதியுள்ளார் அவர். யார் இந்த குவாஜா மொய்னுதீன் சிஷ்டி? சுல்தான் இலுட்மிஷின் ஆட்சி காலத்தில், பாரதத்திற்கு வந்த முதல் சூஃபி ஞானிகளில் ஒருவர் என சொல்லப்படும் இவர், உண்மையில், ஒரு ஹிந்து வெறுப்பாளர். சூஃபிகள் முஸ்லிம் படையில் ஒரு பகுதியாகவே அப்போது வந்திருந்தனர். ஹிந்து மன்னர்களுக்கு எதிரான ஜிஹாதி போர்களில் பங்கேற்றனர். ஹிந்து ராஜ்யங்களையும் செல்வத்தையும் கைப்பற்றுவதையும், மக்களை அடிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இவர்கள் செயல்பட்டனர். காஷ்மீரில், ஹிந்து கோயில்களை அழிப்பதற்கும் அங்கு ஹிந்துக்களை படுகொலை செய்வதற்கும், கட்டாய மதமாற்றம் செய்வதற்கும் ஊக்கமளித்தவர்கள் சூஃபிகள்தான். என ‘இஸ்லாமிய ஜிஹாத், கட்டாய மாற்றங்கள், ஏகாதிபத்தியம், அடிமைத்தனத்தின் மரபு’ என்ற நூலில் அழ்தன் ஆசிரியர் எம்.ஏ கான் குறிப்பிட்டுள்ளார்.