விலை குறையும் மின்சார வாகனம்

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், மின்சார வாகனத் தயாரிப்புகளையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் ஒரு கிலோவாட் (kWh) அலகுக்கு முன்பு மானியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதனை தற்போது, 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், மின்சார வாகனங்களில் விலை ரூ. 7 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம்வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.