லட்சத்தீவில் உருவாகும் காஷ்மீர்

லட்சத்தீவு பகுதிகளில் பெருகும் முஸ்லிம் பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்கவும், தேச பாதுகாப்பில் அதன் ராணுவ முக்கியத்துவத்தை உறுதிபடுத்தவும் அதன் நிர்வாகி பிரபுல் படேல், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் அங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள் பத்வாவை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், அங்குள்ள உள்ளூர் முஸ்லிம் கடைக்காரர்கள், ‘பா.ஜ.கவை சேர்ந்தவர்களுக்கு எந்த பொருளும் விற்பதில்லை’ என்ற அறிவிப்பை தங்கள் கடைகளில் வைத்துள்ளனர். அங்கு 93 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவின் தற்போதைய நிலை 1990களின் காஷ்மீரின் நிலையுடன் ஒத்துள்ளது. காஷ்மீரில் முஸ்லிம்கள் எப்படி ஹிந்துக்களை கொன்றும் கொடுமை செய்தும் விரட்டியடித்தனரோ அதே போலவே லட்சத்தீவு நிலையும் உள்ளது என ஹிந்து அமைப்புகள் தெரிவிக்கின்றன. லட்சத்தீவு ஆட்சியர் அஸ்கர் அலி,  நிர்வாகி பிரபுல் படேல், லட்சத்தீவு பா.ஜ.க தலைவர் அப்துல் காதர் ஹாஜி ஆகியோருக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து புலனாய்வு அமைப்புகள் நிலைமையை கண்காணித்து வருகின்றன.