ஆன்லைனில் பகவத் கீதை வகுப்பு

இஸ்கான் என அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் பல்வேறு ஆன்மிகம் சார்ந்த பயிற்சிகள் மாணவ மாணவியர், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவசமாக போதிக்கப்படுகிறது. ஆன்லைனில் பகவத் கீதை வகுப்பு வரும் 18ம் தேதி முதல் தினமும் இரவு 7:00 முதல், 8:00 மணி வரை ஆங்கிலம், தமிழில் இலவசமாக போதிக்கப்பட உள்ளது. நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பமுள்ளவர்கள், www.studygita.com/register என்ற இணையதள முகவரியிலும், 9840229226 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.