ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு

கொரோனாவால் வழ்வாதாரம் இழந்து அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, உணவுப் பாதுகாப்பு, உதவித்தொகை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரிய மனு, உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ‘தேசிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கான மென்பொருளை உருவாக்குவதில், மத்திய அரசு தாமதத்திற்கு கவலை தெரிவித்தனர். மேலும், புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.