மாத்ருபூமி நியூஸ் சேனல் ஆளும் சி.பி.எம்மின் ஆதரவாளரான லோக்தாந்த்ரிக் ஜனதா தளத் தலைவர் எம்.வி. ஸ்ரேயம்ஸ்குமார் என்பவருக்கு சொந்தமானது. அந்த சேனல் நிர்வாகம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செயல்படுமாறு மாத்ரூபூமியின் செய்தி ஆசிரியர் உன்னி பாலகிருஷ்ணனுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனால் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, சேனல்கள் மதிப்பீடு பட்டியலில், மாத்ரூபூமி நியூஸ் முதல் மூன்று இடங்களில் இருந்தது, ஆனால் ஜனம் டிவி மற்றும் பிற புதிய செய்தி சேனல்களின் துவக்கம் மாத்ருபூமியை பின்னடைய செய்துள்ளது. ஆனாலும், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சிக்கு ஆதரவாக இருப்பது தங்களுக்கு உதவும் என்ற நிலைப்பாடில் உள்ளது மாத்ருபூமி. கேரள செய்தி சேனல்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வதை அம்பலப்படுத்தும் நிகழ்வாக இந்த சம்பவம் திகழ்கிறது.