உணவு வணிக நிறுவனங்கள், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், தங்கள் பில்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அமைப்பில் அவர்கள் பதிவு செய்துள்ள பதிவு எண்ணை அல்லது உரிம எண்ணை கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும். உணவு பொருட்கள் குறித்த புகார்களை நுகர்வோர் தெரிவிக்கும்போது தேவையான தகவல்களை அவர்களால் தரமுடிவதில்லை. அந்த குறை இதனால் தீரும். இனி அவர்கள் குறிப்பிட்ட உணவு வணிகம் குறித்து புகார் வழங்கும்போது, இந்த எண்ணை குறிப்பிட்டு புகார் வழங்க முடியும். இதனால் நுகர்வோருக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும். அவ்வாறு குறிப்பிடாதவை பாதுகாப்பு தரம் அற்றவை என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியும் உரிமம் மற்றும் பதிவுத் துறையினர், உணவு வணிக நிறுவனங்கள் இந்த புதிய ஆணையை செயல்படுத்துவது குறித்து அனைவருக்கும் முறையாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.