ஈஷா யோக மையம் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கோயில்களை அரசுப் பிடியில் இருந்து மீட்க ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ஒரு இயக்கத்தை சமீபத்தில் துவங்கினார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. வழக்கம்போல, திராவிட கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தி.மு.க அமைச்சர் அப்படிச் செயல்படுத்த முடியாது எனக் கூறினார். இந்நிலையில் தற்போது அவர்கள், ஜக்கி வாசுதேவுக்கு எதிரான டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், காட்டை ஆக்கிரமித்து கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தைக் கட்டியுள்ளதாக கூறி ஹேஸ்டேக் பதிவிட்டனர். இது குறித்து ஜக்கி வாசுதேவ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘அதில், வனத்துறைக்குச் சொந்தமான ஒரு இன்ஞ் நிலத்தை நான் ஆக்கிரமித்துள்ளதாக நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேறத் தயார்’ எனக் கூறியுள்ளார்.