தடுப்பூசி குறைவாக செலுத்தும் தமிழகம்

பாரதத்தில் கொரோனா பரவல் மெல்ல கட்டுக்குள் வந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் வைரஸ் பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனால், தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில், மத்திய அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மிகக் குறைவாக செலுத்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் இடம்பிடித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை, 9 வதவீதம் பேருக்கே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் 22.5 சதவீதம் பேரும், குஜராத்தில் 20.5 சதவீதம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்தில், முதல் தவணை கொரோனா தடுப்பூசி குறைந்த அளவிலான மக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதற்கு, தமிழக அரசு மக்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை, கோவை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கவனக்குறைவு, முறையான தடுப்பூசி நிர்வகிப்பு இல்லை, அலட்சியம் போன்ற நிர்வாகக் குளறுபடிகளே காரணமாக இருக்கும். தமிழக அரசு இது குறித்து ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.