முஸ்லிம்களின் சட்டவிரோத குடியேற்றம்

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை, நூர் ஆலம் மற்றும் அவரது உதவியாளர் அமீர் உசேன் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது. இவர்கள், மியான்மர் மற்றும் பங்களாதேஷில் இருந்து ரோஹிங்கியாக்களை சட்டவிரோதமாக அழைத்து வந்து அவர்களுக்கு பான் கார்டு, ஆதார், ரேஷன் கார்டுகள் மற்றும் சிம் கார்டுகள் போன்ற ஆவணங்களைப் பெற உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஆலமும் உசேனும் மியான்மரைச் சேர்ந்தவர்கள், பங்களாதேஷில் உள்ள நயபரா அகதிகள் முகாமில் வசித்து வந்தனர். ஆலம் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்திற்கு வந்து மீரட்டில் குடியேறினான். கடந்த ஜனவரியில் அஜிஜுல்லா என்ற ரோஹிங்கியாவை காவல்துறை கைது செய்தது. அவனை விசாரித்ததில் கிடைத்த தகவலையடுத்து தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.