ஆன்லைனில் 150 கோடி மோசடி

பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் பவர் பேங்க், சன் பேக்டரி, ஈ.இசட்.பிளான் ஆகிய மொபைல் ஆப்கள் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றின் உண்மை சேவையகம் சீனாவை மையமாகக் கொண்டுள்ளது. அந்த ஆன்லைன் லோன் ஆப், மக்களை அதில் அதிக பணம் முதலீடு செய்ய ஆசை காட்டி, 5 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இரண்டே மாதங்களில் இதுவரை ரூ.150 கோடிக்கு அதிகமாக பெற்று மோசடி செய்துள்ளது. புகாரையடுத்து அதனை கண்காணித்த டெல்லி காவல்துறையின் சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு, அதில் ஒரு தொகையை முதலீடு செய்து பண மோசடியைக் கண்டறிந்தனர். இதில் முதலில், ஜூன் 2ம் தேதி இதில் முதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை செய்ததில், மேலும் 10 பேர் சிக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.