பாபா ராம்தேவுக்கு எதிராக ஐ.எம்.ஏ கடிதம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.எம்.ஆர்) அமைப்பிடம் யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) புகார் கடிதம் கொடுத்துள்ளது. அதில், பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை களங்கப்படுத்துகிறார், அவதூறு பரப்புகிறார். கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை அவமானப்படுத்துகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஐ.எம்.ஏ தலைவரான ஜெயலால், தன்னுடைய பதவியை மதமாற்றத்திற்கு பயன்படுத்துவது குறித்தோ, அவரை நீதிமன்றம் கண்டித்தது குறித்தோ, அவர் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்த காரனத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், ஐ.எம்.ஏ உறுப்பினரும் குஜராத்தைச் சேர்ந்த நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர நாகர், டாக்டர் ஜெயலால் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும், அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக விசாரிக்கப்படும் வரை அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.