அனைவருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைத்திட ஏதுவாக உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கு காப்புரிமையை கட்டாயப்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி சுதேசி ஜாக்ரன் மஞ்ச் சார்பாக அகில பாரத அளவில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. நமது பாரதம் கடந்த அக்டோபர் முதல் இதனை வலியுறுத்தி வருகிறது. அதற்கு 120 நாடுகளின் ஆதரவு உண்டென்றாலும் உலக வர்த்தக அமைப்பு (WTO) காப்புரிமை விஷயத்தில் அமைதியாக இருப்பதால் தடுப்பூசி தயாரிப்பு தாமதமாகி வருகிறது. எனவே, இதற்கு ஆதரவு தரும் விதமாக, https://joinswadeshi.com/form2/ என்ர முகவரியில் இந்த டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் தங்கள் ஆதரவு கருத்தினை ஜூன் 13 முன்னதாக பதிவு செய்திட சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கேட்டுக்கொண்டுள்ளது.