உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

சென்னை உயர் நீதிமன்றம், கோயில்கள், மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாக்க ஒரு திருப்புமுனை தீர்ப்பை வழங்கியுள்ளதை வரவேற்றுள்ள பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தன் அறிக்கையில், ‘நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும். அக்குழுவில் இடம் பெறுவோர் குறித்த வழிகாட்டுதல்கள். அக்குழுவின் ஒப்புதல் பெற்றே கோயில்களில் எந்த பணியும் மேற்கொள்ள வேண்டும். பாரம்பரியக் கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடைமுறைகள் கையேட்டை அரசு இறுதி செய்தல். தொல்லியல் துறை, பழமையான கோயில்களை ஆய்வு செய்து சேதத்தை மதிப்பிட வேண்டும். விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.  கோயில் நிதியை, கோயில் பராமரிப்பு, விழாக்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். உபரித்தொகையை மற்ற கோயில்கள் பராமரிப்புக்குப் பயன்படுதலாம். கோயில் நிலங்களை அரசோ அல்லது அறநிலையத்துறையோ தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக விற்கவோ, கொடுக்கவோ கூடாது. கோயில் நிலங்களில் பொதுநோக்கம் என்ற அம்சம் கூடாது. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில் சிலைகளை கணக்கெடுத்து அவற்றைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். திருடப்பட்ட சிலைகள் குறித்த விவரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும். அரசு ஊழியருக்கு இணையாக அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் அனைவருக்குமான ஊதியத்தைக் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.