உலக வங்கி கணிப்பு

உலக வங்கி, வெளியிட்டுள்ள கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குப் பிறகான உலகளாவிய பொருளாதார வாய்ப்பு குறித்த அறிக்கையில், பாரதப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளது. இது கடந்த ஜனவரியில் அறிவித்ததைவிட 3 சதவீத அதிகம். மேலும், சீனாவுக்கு அடுத்ததாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் இருக்கும் என தெரிவித்துள்ள உலக வங்கி, பாரதத்தின் 2021-22க்கான ஜி.டி.பி வளர்ச்சி கணிப்பை 10.1 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் பாரதத்தின் பொருளாதார மீட்சி தடைபட்டுள்ளது. பாரதத்தின் இந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதாரத்திற்கான அதிக செலவின திட்டங்களால் சாத்தியமாகும் என்றும் உலக வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.