கோயில் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள கோவில் நிலங்களில் 72 சதவீதம், அதாவது மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் ‘திருக்கோயில் நிலங்கள்’ பகுதியில் பட்டியலிட்டுள்ள கோயிலை தேர்வு செய்து அதன் விவரங்களை பார்வையிடலாம்.