தமிழக அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மூலமாக 15 பொருட்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான சில்லறை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, N.95 முகக்கவசம் ஒன்று – ரூ. 22.00. கிருமிநாசினி 200 மி.லி.- ரூ. 110.00. கையுறை பரிசோதிப்பது 1 செட் – ரூ. 5.75. கையுறை (ஸ்டெரைல்) 1 செட்- ரூ. 15.00. முகக்கவசம் (2 அடுக்கு) – ரூ. 3.00. முகக்கவசம் (3 அடுக்கு) – ரூ. 4.00. அறுவை சிகிச்சை முகக்கவசம் (பேப்ரிக் கோட்) – ரூ. 4.50. ஒருமுறை பயன்படுத்தும் உடல் கவசம் – ரூ. 12.00. அறுவை சிகிச்சை கவுன் – ரூ. 65.00. மறு உருவாக்க முகக்கவசம் – ரூ. 80.00. ஆக்சிஜன் முகக்கவசம் – ரூ. 54.00. பல்ஸ் ஆக்சி மீட்டர் – ரூ. 1500.00. ஃப்லோ மீட்டர் – ரூ. 1520.00. முகத்தை மூடும் ஷீல்டு கவசம் – ரூ. 21.00. பிபிஇ கிட் – ரூ. 273.00. என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.