இ சேவை மையங்கள் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக, அரசு இ – சேவை மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டன. 30 சதவீத ஊழியர்களுடன், அரசு அலுவல கங்கள் செயல்பட அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, அனைத்து அரசு இ – சேவை மையங்களையும் உடனடியாகத் திறந்து, மக்களுக்கு சேவைகள் வழங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. எனினும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியை பெற்று அதன் பிறகு செயல்பட அறுவுறுத்தப்பட்டு உள்ளது. தாலுகா, மண்டல அலுவலகங்களில், இரண்டு சேவை கவுன்டர்கள் இருந்தால், அதில் ஒன்று மட்டுமே முழு நேரம் செயல்படவும் ஒரு கவுன்டர் மட்டும் உள்ள பிற சேவை மையங்கள், பிற்பகல் வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.