இளம் எழுத்தாளர்களுக்கு மோடி அழைப்பு

பிரதமர் மோடி, ‘தனது டுவிட்டர் பதிவில், ‘மாணவர்களின் சிந்தனைத் திறன், கற்பனைத்திறன்களை ஊக்குவித்தல், மாணவர்களிடம் தலைமைப் பண்பை உருவாக்குதல் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. நாம் அடுத்த ஆண்டு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி, ‘யுவ’ என்ற பெயரில், தேசிய அளவிலான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 30 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழு உருவாக்கப்படும். சர்வதேச அளவில் பாரதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறப்பாக எழுதும் இளம் எழுத்தாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், பாரதப் பாரம்பரியம், கலாச்சாரம், சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில் எழுத வேண்டும். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய புத்தக அறக்கட்டளை இந்த திட்டத்தை செயல்படுத்தும். mygov.in இணையதளம் வழியாக நடத்தப்படும் இந்த போட்டியின் முடிவில், 75 சிறந்த இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என இளம் எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.