பசுவால் லாபம் ஈட்டும் கேரள அரசு

கேரள அரசுக்கு சொந்தமான ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனம் ஔஷதி. பாரதத்தில் உள்ள பொதுத்துறை ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பெரியதான இந்த ஔஷதி, மாட்டு சாணம், சிறுநீர், பால், நெய் மற்றும் தயிர் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா க்ருதம் எனும் மருந்தை விற்பனை செய்கிறது. இந்த பஞ்சகவ்ய கிருதம், மனநலம் சார்ந்த நோய்கள், மஞ்சள் காமாலை, காய்ச்சல், கை கால் வலிப்பு, கேன்சர், நினைவாற்றல், செறிமானம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கும் குணம் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட்டுகள்,  பசுவை கேலி செய்வது, கொன்றுத் தின்பது, ஹிந்துக்கள் பசுவை புனிதமாக்க் கருதி வணங்குவதை உள்ளிட்டவற்றை கேலி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.