‛புளு ஸ்டார் ஆப்பரேஷன்’ நடவடிக்கையின் 37 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிந்தரன்வாலே மற்றும் ஜர்னைல் சிங் உள்ளிட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அதில், பயங்கரவாதிகளை தியாகிகள் என ஹர்பஜன் சிங் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், ‘எனது இன்ஸ்டாகிராம் பதிவு பற்றி, தெளிவுபடுத்தி மன்னிப்பையும் கோர விரும்புகிறேன். வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜ் எதைக் குறிக்கிறது என்பதை உணராமல், அதனை பகிர்ந்து விட்டேன். அது எனது தவறு. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நான் பதிவிட்ட புகைப்படங்களில் இருப்பவர்களை நான் எந்த கட்டத்திலும் ஆதரிக்கவில்லை. நான் ஒரு சீக்கியர். நான் பாரதத்திற்காக போராடுபவன். எதிரானவன் அல்ல. தேசத்தின் உணர்வை புண்படுத்தியதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உண்மையில், எனது தேசத்திற்கு எதிரான எந்த குழுவையும் நான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன். எனது நாட்டிற்காக, கடந்த 20 ஆண்டுகள், ரத்தத்தையும் வியர்வையும் சிந்தியுள்ளேன். ஜெய்ஹிந்த்.’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது பகிரங்க மன்னிப்பை தெரிவித்துள்ளார்.