‘கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறைக்கு இத்திட்டம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். ஏற்கனவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டி தந்த பாரதப் பிரதமர் நரேந்தர மோடி, இப்போது கோதாவரி – காவிரி இணைப்பு திட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். இத்திட்டம் நிறைவேறும்பொழுது தமிழகத்திற்கு ஆண்டுக்கு 100 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும். தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்து இது’ என பா.ஜ.க மாநில தலைவர் எல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.