புவி வெப்பமடைதல் காரணமாக கடந்த 2000 முதல் ஐஸ்லாந்தின் பனிப்பாறைகளில் சுமார் 750 சதுர கிலோமீட்டர் பரப்பை இழந்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த நிலை நீடித்தால் வரும் 2200ம் ஆண்டுக்குள் ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் முற்றிலுமாக மறைந்து போகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.1890 முதல், பனிப்பாறைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்து நிலம் கிட்டத்தட்ட 2,200 சதுர கிலோமீட்டராக இருந்தது.தற்போது அது 18 சதவீதம் குறைந்துள்ளது.அதுவும், பனிப்பாறைகளின் இழப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு எனும் அளவுக்கு வேகமாக நடந்துள்ளது என பனிப்பாறை வல்லுநர்கள், புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.