ஆப்பிளின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்விஃப்ட் மாணவர் சவால்’என்ற போட்டியில் வென்ற 350 வெற்றியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினயா தினேஷ் எனும் 15 வயதான சிறுமியும் ஒருவர். இந்த போட்டியில் குழந்தைகள் தங்கள் கோடிங் திறனை வெளிப்படுத்தி பரிசை வெல்வர்.அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நார்த் பிரன்சுவிக் நகரில் வசிக்கும் அபினயா தினேஷுக்கு கடந்த ஆண்டு இடுப்பு கால் கோளாறு (pelvic foot disorder) இருப்பது கண்டறியப்பட்டது.அதனை குறித்த மருத்துவ தகவல்கள், அதில் இருந்து எப்படி மீள்வது என்று அபினயாவுக்கு மருத்துவர்கள் சரியாக விளக்கவில்லை.இதனால், அவர், இந்த கோளாறுகள் குறித்த தகவல், ஆதாரங்களை அணுகுவதற்கான வழியை அனைவரும் அறியும் விதத்தில் ‘Gastro at Home’ என்ற ‘பயன்பாட்டை’ தானே உருவாக்கினார்.இன்னும் சில நாட்களில் ஆப் ஸ்டோரில் இந்த பயன்பாட்டை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.இதோடு மட்டுமில்லாமல், அபிநயா தனது சொந்த லாப நோக்கற்ற ‘இம்பாக்ட் ஏஐ’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இது இளைஞர்களிடையே செயற்கை நுண்ணறிவு(AI) கற்றல்நடைமுறைகளை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.அபிநயா தனது உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்புக்குப் பிறகு மருத்துவம் அல்லது கணினி அறிவியலில் பட்டம் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.