ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விலை கட்டுப்பாடு

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உற்பத்தி விலையில் இருந்து 198 சதவீதம்வரை ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது விலை நிர்ணயிக்கப்படுவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண சூழலில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அதிகாரத்தின் கீழ், இந்த விலை நிர்ணயக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆக்சிஜன் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர், மருத்துவமனை, விற்பனை செய்யும் நிறுவனங்கள், முகவர்கள் தாங்கள் விற்பனை செய்யும் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலை விவரத்தை அதன் மீது ஒட்ட வேண்டும். மீறும் நிறுவனம் மீது 100 சதவீத அபராதம் விதிக்கப்படும்.விலை நிர்ணயத்தை மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.