டுவிட்டர் நிறுவனத்தில் ப்ளூடிக் வசதி போலி கணக்கை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு வசதி என கூறப்படும் நிலையில், பாரத துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் வசதியை டுவிட்டர் நீக்கியுள்ளது. பிறகு எழுந்த பலத்த எதிர்ப்பால் ப்ளூ டிக் மீண்டும் நிறுவப்பட்டது.அவர் டுவிட்டரை அதிகமாக பயன்படுத்துவதில்லை என பொருத்தமற்ற ஒரு காரணத்தை டுவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.அது மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உட்பட பல ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளில் இருந்தும் ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது.ஓய்வூ பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் தீக்ஷித், பல பா.ஜ.க ஆதரவாளர்கள், தலைவர்களின் கணக்குகளிலும் இந்த ப்ளூடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது. ஒரு சாராரை மட்டும் குறிவைத்து பாகுபாட்டுடன் நடந்து கொள்ளும் டுவிட்டரின் செயல்பாடுகள், சார்பு மனப்பான்மை, பாரத இறையாண்மையை மதிக்காமல் செயல்படுவது, அதன் சட்டதிட்டங்களை மீறுவது போன்ற டுவிட்டரின் தொடர் செயல்பாடுகளால், டுவிட்டரை நைஜீரிய அரசு தடை செய்ததுபோல நமது பாரத அரசும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.