சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2023ம் ஆண்டுக்குள் அகல ரயில் பாதைகள் அனைத்தையும், 100 சதவீதம் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெப்பமயமாக்கலை தடுக்க ரயில்களின் இயக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து தடங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், பசுமை சூழலை உருவாக்கவும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்திய ரயில்வேயின் 39 தொழிற்சாலைகள், 7 தயாரிப்புப் பிரிவுகள், 8 ரயில் பெட்டி பராமரிப்புக் கூடங்கள், ஒரு சரக்குக் கிடங்கு ஆகியவற்றுக்கு ஏற்கனவே ‘பசுமை’ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. வரும் 2030க்குள், ‘பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றம்’ என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, உலகின் மிகப் பெரிய ‘பசுமை ரயில்வே’ என்ற சிறப்பை நமது இந்திய ரயில்வே பெறும் என எதிர்பார்க்கலாம்.