நடப்பு ரபி பருவ அறுவடை காலத்தில் மத்திய அரசு.குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 81 ஆயிரத்து 196 கோடி ரூபாய்க்கான கோதுமை கொள்முதலை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியுள்ளது.கடந்த ஆண்டின் மொத்த கொள்முதலுடன் ஒப்பிடுகையில், கோதுமை கொள்முதல் 5.44 சதவீதம் அதிகம்.நாடு சுதந்திரமடைந்தப் பிறகு முதல்முறையாக, பஞ்சாபிலிருந்து விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.26,000 கோடிக்கு அதிகமாகவும், ஹரியானா விவசாயிகள் தங்கள் கணக்குகளில் ரூ.16,700 கோடிக்கு அதிகமாகவும் நேரடியாக பெற்றுள்ளனர்.இதனால், சுமார் 44.4 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.நடந்து கொண்டிருக்கும் காரீஃப் 2020-21 பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக தொடர்கிறது.கடந்த ஆண்டு 728.49 எல்.எம்.டி வாங்கியதை விட கடந்த ஜூன் 2 வரையில் 799.74 எல்.எம்.டிக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 990 கோடி ரூபாயை சுமார் ஒரு கோடியே 18 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், இதனால் பலனடைந்த சில விவசாயிகளும்கூட அறியாமையால் சில இடைத்தரகர்களின் உத்தரவின் பேரில் மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.