சிக்கும் சீனா

கடந்த ஆண்டு மே மாதம் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ விஞ்ஞானி ஜாவ் யூசென் மர்மமான முறையில் இறந்தார். ஆனால், அவர், இன்றுள்ள கொரோனா நோய்க்கான தடுப்பூசிக் காப்புரிமைகோரி கடந்த 24 பிப்ரவரி 2020 அன்று விண்ணப்பித்துள்ளார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கொரோனா எனும் தொற்று உலகிற்கு வெளிப்படும் முன்னதாகவே அவர் அதனை ஆராய்ந்து அதற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளார் என்பது இதனால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் அந்த பெயரிடப்படாத கிருமி குறித்த ஆராய்ச்சிகளுக்கு சீன தேசிய சுகாதார நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுள்ளார். விருது பெற்ற ராணுவ விஞ்ஞானியாக ஜாவ் யூசென் இருந்தபோதிலும், அவரின் மர்மமான இறப்பு குறித்தோ அல்லது அவருக்கு நடத்தப்பட்ட அஞ்சலி குறித்தோ எந்த அறிக்கையுமில்லை. கொரோனா வைரஸின் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவதை சீனா ஒப்புக் கொண்ட ஐந்து வாரங்களிலேயே இந்த காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாதான் கொரோனா நோய்க்கு காரணம், அதன் ஊஹான் ஆய்வகத்தில் இருந்துதான் அது வெளியானது என்று உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ள சூழலில், இந்த சர்ச்சைக்குரிய அறிக்கை சீனாவை மேலும் ஒரு இக்கட்டில் தள்ளியுள்ளது.