ரேஷன் பொருட்கள் மத்திய அரசு சாதனை

மத்திய அரசால், கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்ட உணவு செயலாளர் சுதன்ஷு பாண்டே செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மே மாதத்தில் மட்டும் கொரோனா இரண்டாம் அலையின் நிவாரணமாக, ரேஷன் கடைகள் மூலம் 55 கோடி பயனாளர்களுக்கு 28 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் சுமார் 63.67 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.’பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ (PMGKAY) திட்டத்தின் கீழ் 80 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்.மே மற்றும் ஜுன் மாதத்தில் NSFA பயனாளர்களுக்கு 90 மற்றும் 12 சதவீத உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.மே, ஜூன் மாதங்களில் 13,000 கோடிக்கு மேலாக உணவு மானியமாக வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.