ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குறித்தக் கூட்டத்தில், பணவீக்கத்தை குறிப்பிட்ட இலக்கிலேயே வைப்பதற்கு ஏதுவாகவும், பொருளாதாள வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 4 சதவீதமாகவே தொடரும்.ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.கடந்த 2020 மே 22ம் தேதி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டது.அதற்குப் பிறகு,கடந்த 6 ஆலோசனை கூட்டங்களில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரதத்தில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக இது 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.