உர மோசடி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பண மோசடி விசாரணை தொடர்பாக, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அமரேந்திர தாரி சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது.முன்னதாக இவ்வழக்கை சி.பி.ஐ பதிவு செய்தது.பிறகு மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.இவ்வழக்கு தொடர்பாக டெல்லி, ஹரியானா, மும்பை உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஏற்கனவே, இஃப்கோ தலைவர் யு.எஸ்.அவஸ்தி மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் எம்.டி.பர்விந்தர் சிங் கெலாட் மற்றும் அவர்களது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுதுள்ளது.இந்த ஊழலுடன் தொடர்புடைய ஒரு நிறுவனமான ஜோதி டிரேடிங் கார்ப்பரேஷனில் பங்குதாரராகவும் அமரேந்திர தாரி சிங் உள்ளார்.லாலு பிரசாத் யாதவுக்கும் அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கும் மிகவும் நெருக்கமான இவர் கடந்த 2020ல் மாநிலங்கள் அவை உறுப்பினரானார்.