மத நடவடிக்கைகளுக்கு ஓய்வூதியம்

ஜனநாயகம், சமத்துவம், அமைதி மற்றும் மதசார்பின்மைக்கான குடிமக்கள் என்ற அமைப்பின் சார்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘மதரசா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்குவதற்காக இயற்றப்பட்ட கேரள மதரசா ஆசிரியர்கள் நல நிதியம் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முஹம்மது முஸ்டாக் மற்றும் நீதிபதி எடப்பகத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘இந்த மதரசா பள்ளியில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பான கல்வியை மட்டுமே வழங்குகின்றன.இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிக்கும் பள்ளிக்கு அரசு எவ்வாறு நிதி அளிக்க முடியும்.அப்படியெனில், அதன் நோக்கம் என்ன, கேரளாவில் செயல்பட்டு வரும் மதரசா பள்ளிகள் உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் மதரசாக்களைவிட முற்றிலும் மாறுபட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டுவரும் மதரசா பள்ளிகள் மதசார்பற்ற கல்வியை அளித்து வருகின்றன.இது நாட்டின் மதசார்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது’என்று தெரிவித்தனர்.மேலும்,’கேரள மதரசா ஆசிரியர் நல நிதிக்கு மாநில அரசு ஏதேனும் பங்களிப்பு செய்துள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியுள்ளனர்.