இஸ்ரேலில், கடந்த டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை, இஸ்ரேலின் மக்கள் தொகையில் 55 சதவீதத்தினருக்கு அதாவது, 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களிடையே 275 மயோர்கார்டிடிஸ் எனப்படும் இதய அழற்சி நோய்கள் பதிவாகியுள்ளன. இதை குறித்த ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கமிஷனின் முடிவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதய அழற்சியை அனுபவித்த பெரும்பாலான நோயாளிகள், மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு மேல் செலவிடவில்லை, 95 சதவீத வழக்குகள் லேசானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 16 முதல் 30 வயதுடைய ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஃபைசர்இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் மயோர்கார்டிடிஸ் தோன்றுவதற்கும் இடையில் தொடர்புள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த ஃபைசர் நிறுவனத்தின் ஒரு அறிக்கையில், ‘மயோர்கார்டிடிஸ் குறித்த இஸ்ரேலிய ஆய்வு பற்றி அறிந்திருக்கிறோம். அனால், தடுப்பூசிக்கும் நோய்க்கும் இடைய்லான தொடர்பு எதுவும் ஊர்ஜிதப்படுத்தப்படவிலை. பாதகமான நிகழ்வுகள் முழுமையாக மதிப்பாய்வுகள் செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆலோசனைக் குழுவும் மயோர்கார்டிடிஸ் மற்றும்தடுப்பூசிகளுக்கு இடையில் ஒரு இணைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.