பாகிஸ்தானின் பாக் வேக்

பாகிஸ்தான் அரசு சீனாவின் உதவியுடன் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியான பாக் வேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானின் சுகாதாரம் தொடர்பான சிறப்பு உதவியாளர் டாக்டர் பைசல் சுல்தான், தடுப்பூசியின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். சீனாவுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். இதில் பேசிய சீன தூதர் நோங் ரோங் ‘சீன தடுப்பூசியை பரிசாக ஏற்றுக்கொண்ட முதல் நாடு பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டார். ஆனால், ‘பல நாடுகள் நம்பாத சீனாவின் தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அரசு ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்கிறது’ என அந்நாட்டு மக்களே கிண்டலடித்து வருகின்றனர்.