அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள ஹோஜாயில், கொரோனா பராமரிப்பு மையத்தில் (சி.சி.சி) சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு இளம் மருத்துவர், இரக்கமற்ற ஒரு இஸ்லாமிய கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு கொரோனா நோயாளி சிகிச்சையின் போது இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் அந்த மருத்துவரைத் தாக்கியுள்ளனர். அங்கு ஒருவரின் அலைபேசியில் பதிவுசெய்யப்பட்ட இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது மருத்துவர்கள் மற்றும் பொது மக்களிடம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று கண்டித்துள்ளதுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய அசாம் காவல்துறைக்கு உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னர் ஆண்ட கட்சிகளால், பல ஆண்டுகளாக அசாமின் ஹோஜாய், நாகான் மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுக், ரூபி போன்ற பகுதிகளில் அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களின் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரித்தன. ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆதரவுடன் அவர்களுக்கு போலி வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள் போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் மிகப்பெரிய மக்கள்தொகை மாற்றம், சட்டவிரோத ஊடுருவல், வன்முறைகள், நில ஆக்கிரமிப்பு, அசாமின் கலாச்சாரத்திற்கும் நாகரிகத்திற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.